இளஞ்செழியன் சுடரேற்றிய வீட்டின் முன் குவிந்தது இராணுவம்
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக இன்றைய நாளில் உலகம் எங்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக தமிழின பேரவலத்தின் நினைவேந்தல் நாளில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகளை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள நிலைமையிலும் பல்வேறு தடைகளைத் தாண்டியும் பலர் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையிலே இன்று மாலை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பீற்றர் இளஞ்செழியன் முல்லைத்தீவு மணற்குடியிருப்பில் உள்ள தன்னுடைய வீட்டில் உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்திய நிலையில் அவருடைய வீட்டினை இராணுவத்தினர் சூழ்ந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.