அரச தலைவர் தலைமையில் இன்று முக்கிய சந்திப்பு
அரச தலைவர் மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை 5 மணிக்கு அரச தலைவரது மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதன் போது ஆளும் கட்சியின் ஏனைய கூட்டணிக் கட்சிகள் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு, இராஜாங்க அமைச்சர்களாக பதவி வகிக்கும் சில இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இராஜாங்க அமைச்சர் பதவிகளுக்கு ஏற்படும் வெற்றிடங்களுக்கு மேலும் சில இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் 18 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால், அரசாங்கம் ஸ்திரத்தன்மையுடன் இருக்கின்றது என்பதை காண்பிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
