சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றுள்ள மேகன் - மலாலா தனிப்பட்ட சந்திப்பு
London
Meghan Markle
Nobel Prize
By Sindu
பிரித்தானிய அரச குடும்பத்தின் உறுப்பினரான ரேச்சல் மேகன் மார்க்கல் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் இருவரும் தனிப்பட்ட தேநீர் விருந்தில் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லண்டனில் உள்ள மேஃபேரில் உள்ள கிளாரிட்ஜஸ் எனும் ஹோட்டலிலேயே இருவரும் சந்தித்துள்ளனர்.
ஆரத்தழுவி வரவேற்பு
ஹோட்டலுக்கு வெளியே ஒருவரையொருவர் அன்புடன் ஆரத்தழுவி வரவேற்றுக்கொண்ட இருவரும், பின்னர் ஒரு நபருக்கு £95 (பவுண்டுகள்) செலவாகும் மதிய நேர தேநீர் விருந்தில் கலந்துகொண்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருவரினதும் இந்த தனிப்பட்ட சந்திப்புக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்