சட்டத்திற்கு புறம்பாக நிதியை பயன்படுத்திய அரசியல்வாதிகள்!
ஜனாதிபதி நிதியம் கடந்த காலங்களில் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் 56 பேருக்கு சட்டத்திற்கு புறம்பாக 130 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மருத்துவ உதவியாக வழங்கியுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவம், மாதாந்திர வருமான வரம்பு, பிரதேச செயலாளரின் அறிக்கை, நிதி சொத்துக்கள் மற்றும் மருத்துவ உதவி வரம்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் இவ்வாறு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி உதவி
குறித்த நிதி உதவி கொடுப்பனவுகள் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், ஜனாதிபதி நிதியிலிருந்து கடன்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இல்லாவிட்டாலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மருத்துவ உதவி வழங்கப்பட்டதாகவும், இந்தத் தொகை மீள வசூலிக்கப்படவில்லை எனவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஒருவருக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக சட்டத்தின் விதிகளுக்கு புறம்பாக சுமார் 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
குறித்த 3 கோடி ரூபாயில் ஒரு கோடியே 37 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை மீட்பு அடிப்படையில் வழங்கப்பட்ட போதிலும், அந்தத் தொகை வசூலிக்கப்படவில்லை என தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |