நினைவுதூபி இடித்து அழிக்கப்பட்டமை தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் கண்டனம்
யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் உடைமைகளையும் இழந்த நிலையில் தமது உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுதூபி இடித்து அழிக்கப்பட்டமை யுத்த வடுக்களில் இருந்து மீளாத தமிழர்களின் உணர்வுகளை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கும் செயல்.
மேலும் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்த நினைவுதுபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர். மேலும் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வடக்கு கிழக்கு நாடு தழுவிய அடைப்புக்கு கிழக்கு பல்கலைக்கழகம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் மக்களும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 15 மணி நேரம் முன்