வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ணம் 2024: வெற்றி வாகை சூடியது ஆப்கானிஸ்தான்
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் (Afghanistan) வெற்றிப்பெற்றுள்ளது.
இலங்கை(Sri Lanka) A மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி இன்று (27.10.2024) ஓமானில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இறுதிப்போட்டியில் வெற்றி
இதனையடுத்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவர் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை தனதாக்கியது.
இந்த தொடரில் கலந்து கொண்ட 8 அணிகளில் இருந்து குரூப் A-வில் இருந்து இலங்கை A, ஆப்கானிஸ்தான் A அணிகளும், குரூப் B-யில் இருந்து இந்தியா A, பாகிஸ்தான் A அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
பங்களாதேஷ் A, ஹொங்கொங், UAE, ஓமான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்நிலையில், இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் A அணியை வீழ்த்தி இலங்கை A அணியும், இந்தியா A அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் A அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |