யாழில் திடீரென மயங்கி விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு
புதிய இணைப்பு
யாழ். (Jaffna) வல்வெட்டித்துறையில் மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துயர சம்பவம் நேற்று யாழ். வல்வெட்டித்துறையில் வங்கிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
மாவடி சமரபாகுவைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான மகாதேவன் திலகராசா (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
வல்வெட்டித்துறையில் உள்ள வங்கி ஒன்றுக்கும் முன்னால் நேற்று சனிக்கிழமை அவர் மயங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அவரை அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே. பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
முதலாம் இணைப்பு
யாழில் (Jaffna) ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சரசாலை தெற்கு, சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் சிவராஜன் (வயது 71) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 16 ஆம் திகதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தார்.
சடலம் மீதான மரண விசாரணை
இதன்போது கொடிகாமம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த சிமெந்தினாலான உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மயக்கமடைந்துள்ளார்.
பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்ன மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

