மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் : ஓமான் கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் ஓமானின் மசந்தம் (Musandam) கடற்கரையிலிருந்து சுமார் 5 கடற்படை மைல் தொலைவில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், 20 பேரைக் கொண்ட அதன் முழுமையான பணியாளர் குழுவும் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
'ஸ்கைலைட்' என அழைக்கப்படும் இந்தக் கப்பலில், மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான 'பலாவு' நாட்டின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு நடவடிக்கைகள்
ஓமான் கடற்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக கடல்சார் பாதுகாப்பு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

புதிய அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஓமான் பிரதான மத்தியஸ்த நாடாகச் செயற்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்ட சம்பவத்தை கத்தார் அரசு வன்மையாக கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Statement | Qatar Strongly Condemns Iranian Attacks on Duqm Port in Oman and Oil Tanker Off Its Coast
— Ministry of Foreign Affairs - Qatar (@MofaQatar_EN) March 1, 2026
Doha | March 01, 2026
The State of Qatar strongly condemns the Iranian attacks that targeted the commercial port of Duqm in the sisterly Sultanate of Oman and an oil tanker… pic.twitter.com/clmKio3DmA
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |