ஈரானிய தீவை கைப்பற்ற அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கில் இரகசிய ஆதரவு! எச்சரிக்கையாக மாறிய உளவுத் தகவல்
ஈரானின் எதிரிகள் ஒரு ஈரானியத் தீவை கைப்பற்றுவதற்கான திட்டத்தைத் தயாரித்து வருவதா அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) சுட்டிக்காட்டியுள்ளார்.
உளவுத்துறை அறிக்கைகளின்படி, அதற்கு பிராந்தியத்தில் உள்ள ஒரு நாடு (பெயர் குறிப்பிடப்படவில்லை) ஆதரவு அளிப்பதாக தெரிவித்த அவர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் தள பதிவில் கருத்து வெளியிட்ட அவர், “
பிராந்திய நாட்டின் ஆதரவு
சில தரவுகளின்படி, ஈரானின் எதிரிகள் ஒரு பிராந்திய நாட்டின் ஆதரவுடன் ஒரு ஈரானியத் தீவை ஆக்கிரமிக்க தயாராகி வருகின்றனர்.

எதிரியின் அனைத்து நடவடிக்கைகளும் நமது ஆயுதப் படைகளின் முழு கண்காணிப்பில் உள்ளன.
அவர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், அந்த பிராந்திய நாட்டின் அனைத்து உயிர்நாடி உள்கட்டமைப்புகளும் (vital infrastructure) எந்த வரம்புமின்றி, தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத தாக்குதல்களுக்கு இலக்காகும்
நமது படைகள் எல்லா எதிரி நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. இந்த முயற்சியில் ஈடுபடும் எந்த பிராந்திய நாட்டுக்கும் கடுமையான விளைவுகள் ஏற்படும் ” என தெரிவித்துள்ளார்.
இந்த எச்சரிக்கை, வளைகுடா பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் பதற்றத்தின் பின்னணியில் வெளியிடப்பட்டுள்ளது.
பதற்றத்தின் ஒரு பகுதி
சமீப நாட்களில் அமெரிக்க - ஈரான் இடையிலான மோதல் சூழல், தங்கு ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானிய எண்ணெய் உள்கட்டமைப்புகள் தொடர்பான அச்சுறுத்தல்கள் ஆகியவை அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிக்கை வந்துள்ளது.

இந்த அறிக்கைக்குப் பிறகு, சர்வதேச ஊடகங்கள் இதை ஈரான்-அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான பதற்றத்தின் ஒரு பகுதியாகக் கருதுகின்றன.
சில ஊகங்கள், பெயர் குறிப்பிடப்படாத அந்த பிராந்திய நாடு UAE அல்லது வேறு வளைகுடா நாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கூறுகின்றன.
ஆனால் ஈரான் அதிகாரப்பூர்வமாக எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை. ஈரான் தனது தீவுகள் குறிப்பாக ஹார்க் தீவு போன்ற முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையங்கள், மீதான எந்தவொரு அச்சுறுத்தலையும் கடுமையாக எதிர்கொள்ளும் என்ற நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |