பலஸ்தீன கொடி போர்த்தப்பட்டு இஸ்மாயில் ஹனியே உடல் நல்லடக்கம்
ஈரான் (Iran) தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்துள்ளது.
இஸ்மாயில் ஹனியேவின் (Ismail Haniyeh) உடல் நேற்று (02.08.2024) வெள்ளிக்கிழமை கட்டாரின் தலைநகர் டோஹாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கில் பலஸ்தீனத்தின் (Palestine) கொடி போர்த்தப்பட்ட ஹனீயேவின் பூதவுடல் தாங்கிய பெட்டியைச் சுற்றி அவருடன் கொல்லப்பட்ட பாதுகாவலரின் பூதவுடல் தாங்கிய பெட்டியும்ம் வைக்கப்பட்டிருந்தது.
பூதவுடல் தாங்கிய பெட்டி
தலைநகா் தோஹாவிலுள்ள அப்துல் - அல் வஹாப் மசூதியில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானவா்கள் பங்கேற்று ஹனியேவுக்கு அஞ்சலி செலுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், டோஹாவில் அமைந்துள்ள அப்துல்-அல் வஹாப் பள்ளிவாசலில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கட்டார் ஜனாதிபதி ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி, கத்தாா் மன்னா் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியும் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இஸ்மாயில் ஹனியேவுக்கு அடுத்தபடியாக ஹமாஸின் அரசியல் பிரிவு தலைமைப் பொறுப்பை ஏற்கலாம் என்று கூறப்படும் அவரது நெருங்கிய உதவியாளா் காலித் மிஷாலு ஹமாஸைப் போன்ற மற்றொரு பாலஸ்தீன ஆயுதக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் தலைவா் கலீல் அல்-ஹய்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |