மத்தியதரைக் கடலில் பழுதான படகு:15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி 17 அகதிகள் உயிரிழப்பு

Spain Europe Death Migrants
By Dharu Aug 05, 2026 06:51 PM GMT
Report

ஸ்பெயினின் பாலியாரிக் தீவுகளை நோக்கி படகில் பயணித்தபோது, மத்தியதரைக் கடலில் உணவு, தண்ணீரின்றி 15 நாட்கள் தத்தளித்த நிலையில் இருந்த வட ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இரு புலம்பெயர்ந்தோர் நேற்று அதிகாலை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களுடன் பயணம் செய்ததாக கூறப்படும் மேலும் 17 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயினின் பாலியாரிக் தீவுகளுக்கான மத்திய அரசின் பிரதிநிதி வெளியிட்ட அறிக்கையின்படி, மல்லோர்கா தீவின் தென்மேற்கே சுமார் 13 கடல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை 3.00 மணியளவில் (0100 GMT) இந்த இருவரும் மீட்கப்பட்டனர்.

வெளிநாடொன்றில் சிறையிலிருந்து டசின்கணக்கான கைதிகள் தப்பியோட்டம்

வெளிநாடொன்றில் சிறையிலிருந்து டசின்கணக்கான கைதிகள் தப்பியோட்டம்

கடுமையான நீரிழப்பு

நீரிழப்பு மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மத்தியதரைக் கடலில் பழுதான படகு:15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி 17 அகதிகள் உயிரிழப்பு | Migrant Boat Adrift Mediterranean Sea For 15 Days

மீட்கப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி, அவர்கள் பயணித்த படகு 15 நாட்களாக கடலில் தத்தளித்ததாகவும், தங்களுடன் இருந்த மற்ற 17 பேரும் அந்தக் காலப்பகுதியில் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும், உயிர் தப்பிய இருவரின் வாக்குமூலத்தைத் தவிர, அந்த 17 பேர் குறித்து வேறு எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று பாலியாரிக் தீவுகளுக்கான மத்திய அரசின் பிரதிநிதியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் அடிகோடிட்டுள்ளன.

இதையடுத்து, ஸ்பெயின் கடல்சார் மீட்புப் படையினர் ஹெலிகாப்டரை அனுப்பி தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் பகுதிக்குள் 24 மணிநேரத்தில் புகுந்த 49,000 மொரோக்கர்கள் : ஐரோப்பிய எல்லைகளில் பதற்றம்!

ஸ்பெயின் பகுதிக்குள் 24 மணிநேரத்தில் புகுந்த 49,000 மொரோக்கர்கள் : ஐரோப்பிய எல்லைகளில் பதற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி