சிறுமி துஷ்பிரயோகம்! கட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட லலித் எதிரிசிங்க
sri lanka
people
sri lanka podujana peramuna
By Shalini
15 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் லலித் எதிரிசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் சாகர கரியவாசம் வெளியிட்ட கடிதத்தில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் மிஹிந்தலை பிரதேச சபையின் துணைத் தலைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை லலித் எதிரிசிங்கவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி