போதையில் எதிர்க்கட்சித் தலைவரின் கன்னத்தில் அறைந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பி
மிஹிந்தலை பிரதேச சபை இன்று காலை கூடிய போது போதையில் இருந்த ஒருவரால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குடிபோதையில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இந்திக ருக்ஷன் ராஜபக்ஷ சபையின் எதிர்க்கட்சி தலைவரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதையடுத்து சபையின் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், இந்திக ருக்ஷன் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தார்.
மிஹிந்தலை பிரதேச சபை இன்று காலை 10.30 மணியளவில் லால் செனவிரத்ன தலைமையில் கூடியது. சபை கூட்டப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இந்திக ருக்ஷன் ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அதே நேரத்தில், எழுந்து நின்று கொண்டிருந்த இந்திக ருக்ஷன் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவரைத் திட்டி, கன்னத்தில் அறைந்தார். தொடர்ந்து சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் மிஹிந்தலை பிராந்திய மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது இந்திக ருக்ஷன் ராஜபக்ஷ போதையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மிஹிந்தலை பொலிஸார் எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து ஒரு அறிக்கையை பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.