அநுர அரசாங்கத்திலும் தொடரும் தமிழர் மீதான இராணுவ அடக்குமுறை
கடந்த கால அரசாங்கங்களை போல அல்லாது பாரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது.
இருப்பினும், தற்போது வரை கடந்த காலங்களை போல தமிழர் தரப்பு மீதான இராணுவத்தின் அடக்குமுறை என்பது தீராமல் தொடர்ந்த வண்ணமே உள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தென்னிலங்கை தரப்பை பொறுத்தமட்டில் ஆட்சி மாற்றம், மக்கள் நலன் குறித்த பலதரப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் தமிழர் தரப்பில் அது கேள்விக்குட்படுத்தக்கூடிய விடயமாக மாறியுள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம், ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆட்சி மாற்றம் என தெரிவித்து வந்த அரசாங்கத்தின் கீழ் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றிருப்பது தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தின் மீதான பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் அடுத்த கட்டம், படுகொலை செய்யப்பட்ட இளைஞர் விவகாரத்தின் முழுமையான பின்னணி, தமிழ் தரப்பில் அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டுக்கள், இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகள் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய பார்வைகள் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
