நிறுத்தப்படுகிறதா பால்மா இறக்குமதி? வெளியான தகவல்
milk
imports
stoped
By Sumithiran
நாட்டின் வணிக வங்கிகளில் டொலருக்கான தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக 70 சதவீதமான பால்மா இறக்குமதிகளை நிறுத்த பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த தகவலை பால்மா இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் லக்ஷ்மண் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் பால்மா வகைகளின் விலை அதிகரிப்பு, கப்பல் கட்டணம் அதிகரிப்பு, டொலருக்கு நிகரான ரூபாவின் வீழ்ச்சி என்பன காரணமாக பால்மாக்களின் விலைகளை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
எனினும் அதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. நாட்டில் நாள் ஒன்றில் 200 மெற்றிக் தொன் பால்மா பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி