மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சிகர தகவல் - மீண்டும் அதிகரிக்கவுள்ள பால்மா விலை?
price
increase
milk powder
again
By Sumithiran
மீண்டும் பால்மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பால்மாவுக்கான விலையில் அதிகரிப்பு ஏற்பட்டதை அடுத்து நாட்டில் நிலவிய பால்மாவுக்கான தட்டுப்பாடு முடிவிற்கு வந்தது. ஆனால் அந்த நிலை சிறிதுநாட்களே நீடித்தது.
இந்த நிலையில் மீண்டும் சந்தையில் தொடர்ந்து பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட தாமதம் மற்றும் களஞ்சியசாலைகளின் கட்டண அதிகரிப்பு போன்ற காரணங்களால் பால்மா இறக்குமதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
எனவே எதிர்காலத்தில் பால்மா விலையில் மீண்டும் மாற்றம் ஏற்படலாம் எனவும் அmவர் மேலும் தெரிவித்தார்.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 16 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி