நாட்டிற்கு தேங்காய் நீரினால் பல மில்லியன் டொலர் வருமானம்
வீடுகளில் வீணாகும் தேங்காய் நீரை சேகரித்து ஏற்றுமதி செய்யும் திட்டமொன்றினை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் தேங்காய் நீரின் ஒரு லீற்றரின் கொள்வனவு விலை 18 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பெரேரா (Roshan Perera) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மில்லியன் டொலர் வருமானம்
இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் 13,348 மெற்றிக் தொன் தேங்காய் நீர் ஏற்றுமதி செய்யப்பட்டு 11.16 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு (2023) இதே காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேங்காய் நீரின் அளவு 11,365 மெற்றிக் தொன் ஆகும்.
இதற்கமைய, ஒரு தேங்காயில் 250 முதல் 300 மில்லி மீற்றர் வரை தண்ணீர் உள்ளதுடன், மிகச்சிறிய தேங்காயில் சுமார் 150 மில்லி மீற்றர் தேங்காய் தண்ணீர் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்தோனேசியாவில் தென்னையில் காணப்படும் தேங்காய் நீரை விட இலங்கையில் தேங்காய் நீரின் செறிவு அதிகமாக இருப்பதாகவும் ரொஷான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |