யாழில் சட்டவிரோத நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் எடுத்த உடனடி நடவடிக்கை
Sri Lanka
Meetings
Douglas Devananda
By Vasanth
யாழ்.அரியாலை கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக மண் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
நல்லூர் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச பொலிஸ் அதிகாரி ஆகியோருடன் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்போது சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தல் வழங்கினார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி