ஊடகவியலாளர்களை புறக்கணத்து விட்டு காரில் ஏறிச் சென்ற அமைச்சர்
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
Wimal Weerawansa
By Vasanth
அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் 12 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் சிலர் நேற்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கை அரசியல் மட்டத்தில் இந்த சந்திப்பு ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்க வேண்டுமென அண்மை நாட்களாக விமல் கூறி வருகின்றார்.
இதையடுத்து நேற்று நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட விமல் வீரவங்ச ஊடகவியலாளர்கள் சந்திக்க மறுத்துள்ளார்.
அவரிடம் கேள்வி எழுப்ப முற்பட்ட போதும் அவர் ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்காமல் காரில் ஏறி சென்றுள்ளார்.
ஊடகவியலாளர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்த போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அவசரமாக காரில் ஏறி சென்றுள்ளார்.