எல்லைப் பிரச்சினை தீவிரம்; சீனாவுடனான உறவு நீடிக்காது - இந்தியா திட்டவட்டம்!
சீனாவுடன் தொடர்ச்சியாக நல்லுறவை பேண முடியாது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவிடமிருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவால்களை எதிர்கொண்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அனந்த் தேசிய பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய போதே ஜெய்சங்கர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உறவு நீடிக்காது
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இருநாட்டின் நல்லுறவு என்பது சமநிலையில் இருக்க வேண்டும் எனவும் சீனா சொல்வது போல், அதன் விருப்பம் போல செயல்பட முடியாது.
கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவுடனான எல்லைப் பிரச்சினை கடுமையானதாக உள்ளது.
எல்லையில் பதற்றநிலை குறைந்து, அமைதி நிலவுமாக இருந்தால் இருநாடுகளின் நல்லுறவுவை நீடிக்கலாம்.
இல்லையெனில் தொடர்ச்சியான நல்லுறவுடன் இரு நாடுகளும் பயணிக்க முடியாது.
எல்லையில் முன்பு இருந்த நிலையை சீனா மாற்றுவதைத் தடுப்பதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் இந்திய மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது." என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
போர் பதற்றம்
நீண்ட காலமாக சீனா - இந்தியாவிற்கு இடையிலான எல்லைப்பிரச்சனையானது தொடர்ந்து வருவதோடு, தற்போது தீவிரமடைந்துள்ளது.
தற்போது இரு நாட்டின் எல்லைகளிலும் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் எனும் பதற்றநிலை நீடித்து வருகிறது.
இந்த எல்லைப்பிரச்சினையானது இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தக உறவுகளையும், அரசியல் ரீதியிலான நல்லுறவுகளையும் பதித்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், சீனாவுடன் தொடர்ச்சியாக நல்லுறவை பேண முடியாது என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.