மாணவர்களை பாதுகாக்க தேசிய கெடட் படை: கொண்டுவரப்படவுள்ள புதிய திட்டம்
போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக தேசிய கெடட் படையின் தலைமையில் சமூக புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ரண்டம்பே தேசிய கெடட் கார்ப்ஸ் ஹெர்மன் லூஸ் மற்றும் சொய்சா சாம்பியன்ஷிப் போட்டிகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், திறமையான சிறுவர்கள் மற்றும் கேடட் படையினரின் செயற்பாடுகள் நவீன தொழில்நுட்ப முறைகளின் ஊடாக பிரபலப்படுத்தப்பட்டு ஊக்குவிக்கப்படும்.
கலந்துகொண்டோர்
கொழும்பு ஆனந்த வித்தியாலயம் மற்றும் கண்டி மகளிர் உயர்தரப் பாடசாலையின் கெடட் அணிகளான ஹெர்மன் லூஸ் மற்றும் த சொய்சா ஆகியோர் சாம்பியன்ஷிப்பை வென்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்பட்டன.
மேலும், குறித்த நிகழ்வில் மகாசங்கரத்னா மற்றும் ஏனைய மத குருமார்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.