கொரோனா வைரஸ் இந்தளவுக்கு பயங்கரமாக பரவும் என்று எதிர்பார்க்கவில்லை - அமைச்சர் வாசுதேவ பதில்
srilanka
covid19
corona
vasudeva nanayakara
press meet
By S P Thas
கொரோனா வைரஸ் இந்தளவுக்கு பயங்கரமாக பரவும் என இதற்கு முன்னர் எந்த மதிப்பீட்டையும் செய்ய முடியாமல் போனது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதனை விட குறைவான மட்டத்திலேயே நோய் பரவல் இருக்கும் என அரசாங்கம் மதிப்பிட்டிருந்தது எனவும் எனினும் தற்போது எதிர்பார்த்ததை விட தொற்று நோய் பரவல் அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இணையத்தளம் வழியாக நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போது தொற்று நோயை தாங்கிக்கொள்ளும் அளவுக்கு வைத்தியசாலைகளில் இடவசதிகள் இல்லை. நோய் அறிகுறிகள் தென்படாத சில நோயாளிகள் வீடுகளில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்