இந்தோனேஷியா பறந்தார் அமைச்சர் விமல்
கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பான இரண்டாவது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa)நேற்று (08) இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்குச் சென்றுள்ளார்.
இந்தோனேசிய கைத்தொழில் அமைச்சும் ஐக்கிய நாடுகளின் தொழிற்துறை அபிவிருத்தி அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன,
மேலும் இம்மாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் "நிலையான தொழில்மயமாக்கலுக்கான தொழில்களை துரிதப்படுத்துதல்" என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. ஜகார்த்தா வந்தடைந்த தொழில்துறை அமைச்சர் மற்றும் அவரது பரிவாரங்களை இந்தோனேசியாவின் தொழில்துறை அமைச்சின் செயலாளர் வரவேற்றார்.
பிரதான மாநாட்டிற்கு சமாந்தரமாக ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் கைத்தொழில் அபிவிருத்தியில் எழும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச விசேட கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.