வெடியோசைக்கு மத்தியில் பிறந்த குழந்தை -'சுதந்திரம்' என பெயரிட்ட உக்ரைன்(photo)
உக்ரைன் தலைநகரான கிவ்வில் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு பயந்து பொதுமக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அவ்வாறு தஞ்சமடைந்திருந்த 23 வயதான பெண் ஒருவருக்கு அங்கேயே போருக்கு மத்தியில் வெடிகுண்டுகளின் சத்தத்தில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
நேற்று பிரசவ வலியால் துடித்த அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு காவல் துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. காவலர்கள் அந்த பெண்ணையும் குழந்தையையும் பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த குழந்தைக்கு மியா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில், 'பூமிக்கு அடியில், எரியும் கட்டடங்கள் மற்றும் ரஷ்ய தாங்கிகளுக்கு அடுத்ததாக... தங்குமிடங்களில் ஒன்றில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அவளை சுதந்திரம் என்று அழைப்போம்! உக்ரைனை நம்புங்கள்' என்று பதிவிட்டுள்ளது.
First (to our knowledge) baby was born in one of the shelters in Kyiv. Under the ground, next to the burning buildings and Russian tanks… We shall call her Freedom! ?? Believe in Ukraine, #StandWithUkraine pic.twitter.com/gyV7l2y9K1
— MFA of Ukraine ?? (@MFA_Ukraine) February 26, 2022