மிதிகம லசாவை நியாயப்படுத்தும் சஜித் தரப்பு!
வெலிகம பிரதேச சபைத் தலைவர் “லசந்த விக்ரமசேகர” தேர்தலில் வேட்பாளராக முன்னிலையாகும் போது எந்தவொரு குற்றச் செயலிலும் தொடர்புபட்டிருக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் தற்போது வடக்கு, கிழக்கில் அரசியல்வாதிகளாக உள்ளதாகவும், 89 கலவரத்தில் ஈடுபட்ட ஜேவிபியுடன் தொடர்புடைய கட்சி தற்போது ஆட்சியமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வேட்பாளர்
அண்மையில் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, குற்றச் செயல்களில் தொடர்புபட்டுள்ளதை அறிந்திருந்தும் அவரை தேர்தலில் வேட்பாளராக்கியது ஏன் என ஊடகவியலாளர் இதன்போது கேள்வியெழுப்பினார்.

குறித்த கேள்விக்கு பதிலளித்த சுஜீவ சேனசிங்க, “தேர்தலில் போட்டியிடும் போது லசந்த விக்ரமசேகர குற்றச் செயல்களிலிருந்து விலகியிருந்தார். அப்போது அவர் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பில் இருந்ததாக எங்களுக்கு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதேவேளை, அது போன்ற ஒரு பிரதேசத்திற்கு வைத்தியர்கள், பொறியியலாளர்களை நியமிக்க முடியாது அல்லவா? சிறைச்சாலைக்கு வெளியிலும் கூட, “சிறைக் கைதிகளும் மனிதர்களே” என பொறிக்கப்பட்டுள்ளது. தவறிழைத்தவர்களுக்கு திருந்தி வாழ நாம் இடமளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்