உலகத் தலைவர்களை பின்தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தார் மோடி
மூன்றாவது தடவையாக செல்வாக்குமிக்க உலக தலைவர்களில் இந்திய பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தப்படிட்யலில் அமெரிக்க அதிபர் பைடன்,கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.
அமெரிக்க தலைநகர் வோஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு பிரபல கருத்து கணிப்பு நிறுவனமான ‘மோர்னிங் கன்சல்ட்' நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பிலேயே மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.அவருக்கு ஆதரவாக 76 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
பின்வரிசைக்கு சென்ற உலகத் தலைவர்கள்
மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 66 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும் சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் 58 சதவீத வாக்குகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 49 சதவீத வாக்குகள், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 47 சதவீத வாக்குகள், இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி 41 சதவீத வாக்குகள், பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரோ37 சதவீத வாக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 37 சதவீத வாக்குகளுடன் 8-வது இடத்தில் உள்ளார். ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 37%, இந்திய வம்சாவளியை சேர்ந்த அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் 36%, சுவீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் 33%, போலந்து பிரதமர் மத்தியூஸ் மோரவெக்ஸி 31%, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 31%, ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மர் 28%, நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே 27%, நோர்வே பிரதமர் ஜோனஸ் கார் ஸ்டோரா 25%, இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் 25%, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் 24%, ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் 21%, தென் கொரிய அதிபர் யூன் சோக் யோல் 18%, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ 16%, செக் குடியரசு பிரதமர் பீட்டர் பியாலோ 16 % வாக்குகளை பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்த ஆண்டில் கடந்த பெப்ரவரி, ஏப்ரல், செப்ரெம்பர் மாதங்களில் 'மோர்னிங் கன்சல்ட்' நிறுவனம் உலக தலைவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
கடந்த பெப்ரவரியில் 78 சதவீத வாக்குகள், கடந்த ஏப்ரல், செப்ரெம்பரில் 76 சதவீத வாக்குகளுடன் பிரதமர் மோடி முதலிடம் பிடித்திருந்தார்.
கடந்த 9 ஆண்டுகளில்‘மோர்னிங் கன்சல்ட்' வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகளில் 75 சதவீதம் முதல் 80 சதவீத வாக்குகளைப் பெற்று பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |