பல்கலை பகிடிவதைகளுக்கு முற்றுபுள்ளி : கல்வி அமைச்சின் அதிரடி முடிவு
பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை பெறுவதற்காக ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த நடவடிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை துணை அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன (Madhura Senevirathna) தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள்
இதன்படி, இந்த அதிகாரிகள் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவின் கீழ் நியமிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய கவலைகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் உயர் மட்ட கலந்துரையாடலுக்காக கொழும்புக்கு (Colombo) அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டம் அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasooriya) தலைமையில் நடைபெறவுள்ளதாக மதுர செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்றும் விசாரணைகள்
இந்தநிலையில், சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவனின் சமீபத்திய மரணம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
மாணவரின் மரணத்திற்கு பங்களித்திருக்கக்கூடிய ஏதேனும் உளவியல் காரணிகளை மதிப்பிடுவதற்காக சுகாதார அமைச்சின் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், இது தொடர்பில் விசாரணையை ஆதரிக்க ஏற்கனவே கம்போலா மருத்துவமனைக்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
