சர்வதேச சட்டங்களை உருவாக்கும் ஐ.நா குழுவுக்கு மொஹான் பீரிஸின் பெயர் பரிந்துரை - வெளியானது எதிர்ப்பு

law un mohan peris
By Vanan May 15, 2021 07:47 AM GMT
Report

சர்வதேச சட்டங்களை உருவாக்கும் ஐக்கிய நாடுகள் குழுவுக்கு ஸ்ரீலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொஹான் பீரிஸின் பதவி காலத்தில் ஸ்ரீலங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, கொலை சித்திரவதை உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் இடம்பெற்றதாக மற்றும் உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டப் பணிப்பாளர் யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கான 34 உறுப்பினர்கள் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. அவர்கள் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஐந்து வருடங்களுக்கு பதவி வகிக்கவுள்ளனர்.

அந்த குழுவிலிருக்கும் 34 உறுப்பினர்களில் எட்டு பேர் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ளதோடு அந்த எட்டு இடங்களுக்கு பத்து பேர் போட்டியிடவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சார்பில் அந்த ஆணைக்குழுவிற்கு ஸ்ரீலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அந்த நியமனத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டாமென உலக நாடுகளை உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு ஆகியவை கேட்டுக் கொண்டுள்ளன.

மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசராக செயற்பட்ட காலத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, கொலை, சித்திரவதை மற்றும் பாலியல் வன்செயல்களைச் செய்தவர்களை சட்டத்தின் முன்னர் நிறுத்த அவர் தவறியிருந்ததாக அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

உலகளவில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்று கருதுபவர்களும் சட்டவாளர்களும் இந்த நபருக்கு வாக்களிக்க வேண்டாமென, ஐ.நா பொதுச் சபையிலுள்ள உறுப்பு நாடுகளை வலியுறுத்த வேண்டும் என உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டப் பணிப்பாளர் யாஸ்மின் சூக்கா கோரியுள்ளார்.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டது காணாமல் ஆக்கப்பட்டது. கொல்லப்பட்டது, கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது அல்லது பணிகளைச் செய்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்டது ஆகியவை நடைபெற்ற போது மெஹான் பீரிஸ் தலைமைப் பொறுப்பில் இருந்ததாக, ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பின் பாஷன அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அவரது செயற்பாடு மற்றும் ஸ்ரீலங்கா அரசு ஆகியன செய்த தவறை மூடி மறைக்க முயன்ற இவரது நியமனத்திற்கு எதிராக உலகம் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டுமென என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.    

ReeCha
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025