பணப் பிரச்சினையால் அவதிப்படுபவர்களா... இதை செய்து பாருங்கள் உடனடி பலன்
தற்போதைய காலகட்டத்தில் எந்த விடயம் ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் மிக முக்கிய தேவை பணம் மட்டும் தான். ஆனால் இந்த பணம் எல்லாரிடமும் இருப்பதில்லை.
குறிப்பாக அதிகமாக சாம்பாதித்தாலும் பணம் தங்குவது என்பது சாதாரண காரியம் இல்லை. இதனால் பல குடும்ப பிரச்சனைகளும் சமூக பிரச்சனைகளும் ஏற்படுகின்றது.
பணத்தட்டுப்பாடு என்ற இந்த பிரச்சனையிலிருந்து வெளிவரவே முடிவதில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பணத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை நம்மிடம் இல்லை என்று சொல்லப்படுகிறது.
அதற்கான ஒரு எளிய பரிகார வழியை பற்றி தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவு நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
ஆன்மீக குறிப்பு

வீட்டில் எப்போதும் பணம் தங்கவும் செல்வ வளத்துடன் வாழவும் பெரும்பாலானோர் துளசி பூஜை செய்வதை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இந்த துளசியானது மகாலட்சுமி தாயார் மறு உருவமாகவே பார்க்கப்படுகிறது.
அப்படியான இந்த துளசி செடிக்கு தினமும் பூஜை செய்யும் போதே நம்முடைய கர்ம வினைகள் நீங்கி வீட்டில் செல்வம் மகிழ்ச்சி அனைத்தும் நிலைக்கும் என்பது ஐதீகம். இப்போது நம்முடைய பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கும் இந்த துளசி செடியை பயன்படுத்தி தான் இந்த பரிகாரத்தை செய்ய போகிறோம்.
இதற்கு நாம் தினமும் குளிக்க செல்வதற்கு முன்பாக ஒரு பத்து துளசி இலையை பறித்து அல்லது கடைகளில் முன்னமே வாங்கி வைத்து விடுங்கள்.
இதை வீட்டில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் எந்த துளசி இலையை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
அந்த தண்ணீரின் துளசி இலை சாறு முழுவதுமாக இறங்கி விடும். அதன் பிறகு இந்த தண்ணீரை நீங்கள் குளிக்க பயன்படுத்தும் தண்ணீரோடு கலந்து குளிக்க வேண்டும். அப்படி குளிக்கும் வேளையில் இந்த மந்திரத்தை தவறாமல் சொல்ல வேண்டும்.
மந்திரம்

"ஓம் தான ப்ரதாயை நமஹ" என்று இந்த மந்திரத்தை நீங்கள் குளிக்கும் போது எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள்.
துளசி கலந்த தண்ணீருடன் இந்த துளசி மந்திரத்தையும் நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது உங்களிடம் இருக்கும் பணத்தடைகள் அனைத்தும் நீங்கி பண ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதன் மூலம் உங்களுக்கு பணவரவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
| இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள் - எந்த நாட்டவர்கள் அதிகம் தெரியுமா..! |