பணமோசடி செய்தவரை விடுவித்ததாக காவல்துறை மீது குற்றச்சாட்டு - மக்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா பிரதேச மக்களை இந்தியாவிற்கு யாத்திரைக்கு அழைத்துச் செல்வதாக கூறி பணமோசடி செய்த நபரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தும் அவரை விடுவித்ததையடுத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று திங்கட்கிழமை (28) மதியம் இடம்பெற்றது.
மேலும் இது தொடர்பில் கூறுகையில், குறித்த நபர் வவுனியா மற்றும் மதவாச்சி ஆகிய பகுதிகளில் 20 இற்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
காவல்துறையில் முறைப்பாடு

அத்துடன் ஒருவரிடம் இருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் மற்றும் அவர்களது கடவுச்சீட்டு, அடையாள அட்டை போட்டோ பிரதி உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்ற நபர் யாத்திரைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இதனால்,பணம் செலுத்தியவர்களின் மூலமாக நபருக்கு எதிராக வவுனியா காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
எனினும் சம்மந்தப்பட்டவர் காவல்துறைக்கு செல்லாது தலைமைறைவாகி இருந்துள்ளார்.
பதாதைகள்

இந்நிலையில், நபர் வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களம் முன்பாக நிற்பதாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரியவந்ததையடுத்து பாதிக்கப்பட்டவர்களால் பிடித்து அவரை காவல்துறை உயர் அதிகாரியிடம் ஒப்படைத்தும் குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
அத்துடன் காவல்துறை அதிபர் காரியாலத்தில் முறைப்பாடு ஒன்றினையும் இன்று பதிவு செய்ததுடன் வவுனியா காவல்துறையினர் குற்றவாளியை விடுவித்ததாக தெரிவித்து காவல்துறை அதிபர் காரியாலயம் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
பல்வேறுப்பட்ட பதாதைகளை ஏந்தி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 14 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்