இலங்கையின் தற்போதைய நிலைமை - டெல்லியில் முக்கிய பேச்சு(படம்)
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவாலை இன்று புதுடில்லியில் சந்தித்து, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தார்.
இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கு இடையிலான வழக்கமான மற்றும் தொடர்ச்சியான உரையாடலின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எதிர்கால ஒத்துழைப்புக்கான முன்னுரிமை
இரு நாடுகளின் பரஸ்பர நலன்கள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான முன்னுரிமை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து அவர்கள் கலந்தரையாடினர்.
Did status Quo shift with Sri Lanka?
— Indian Aerospace Defence News (IADN) (@NewsIADN) November 12, 2022
After Armed Forces delegation to Sri #Lanka, a day ago. Sri Lanka’s High Commissioner to India Milinda Moragoda met #NSA Shri. Ajit Doval today in New Delhi. ?? ??
Read: https://t.co/5AD5xntgAv pic.twitter.com/7AVo2rFw3h