அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கத் தயாராகும் மேலும் சில மருத்துவர்கள்?
doctors
covid technical team
lifting
By Sumithiran
கொவிட் தொழில்நுட்ப குழுவிலிருந்து மேலும் சில மருத்துவ நிபுணர்கள் விலக உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறாமல், அரசியல் ரீதியிலான முடிவுகள் அங்கு எடுக்கப்படுவதாகவும் அதனால் தொழிற்துறை என்பதை பாதுகாத்துக் கொள்வதற்காக குழுவிலிருந்து விலக சிலர் முடிவெடுத்திருப்பதாகவும் சங்கத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
இதேவேளை குறித்த குழுவிலிருந்து இரண்டு மருத்துவ விசேட நிபுணர்கள் இதுவரை விலகியமை குறிப்பிடத்தக்கது.