யாழ். பல்கலை பதிவாளர் பொறுப்பற்ற நடவடிக்கை - ஊழியர் சங்கம் கடுமையாக குற்றச்சாட்டு
யாழ் பல்கலையின் பதிவாளரது திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழ்பாணம் மவட்டத்தின் உரிமைகள் பதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (23.10.2025) நடந்த ஊடக சந்திப்பின் போதே சங்கத்தின் தலைவர் PTJ ஜசோதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் (University of Jaffna) காணப்படும் கல்வி சாரா ஊழியர்களின் 355 நிரந்தர பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி பெறுவதில் சிறு நிர்வாகத்தவறு ஏற்பட்டுள்ளது.
திட்டமிட்ட பின்னடிப்பு
எனவும் அதேவேளை திட்டமிட்ட பின்னடிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் ஊடகச் செய்தியினூடாக கூறுகின்ற போதிலும் அதன் உண்மையான நிலைமை வேறாக இருக்கின்றது.
குறிப்பாக இலங்கையில் உள்ள 17 பல்கலைக் கழகங்களிலும் காணப்படும் போதனை சாரா ஊழியர்களுக்கான வெற்றிடங்களில் 1400 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவது எனும் அரச தீர்மானத்திற்கமைய அனைத்துப் பல்கலைக் கழகங்களாலும் வழங்கப்பட்ட கோரிக்கையின்படி காணப்படும் வெற்றிடங்களில் 67% வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டு பெரும்பாலான பல்கலைக்கழகங்களினால் அவற்றிற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் 355 பதவி வெற்றிடங்களில் 67 வீதமான 237 இற்குமதிகமான வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியில் ஆக 07 வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்படுவது தனியே பல்கலைக்கழக சமூகம் மாத்திரமன்றி எமது சமூகத்தின் இளம் தொழில் தேடுவோராகவே இருக்கின்றது. இந்நிலைமைக்கு யார் பொறுப்பு கூறுவது? எனும் கேள்வி எம் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் நாம் எதிர்வரும் 28 ஆம் நாளன்று ஒருநாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இலங்கையில் உள்ள 17 பல்கலைக்கழகங்களிலும் காணப்படும் போதனை சாரா ஊழியர்களுக்கான வெற்றிடங்களில் 1400 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவது எனும் அரச தீர்மானத்திற்கமைய அனைத்துப் பல்கலைக்கழகங்களாலும் வழங்கப்பட்ட கோரிக்கையின்படி காணப்படும் வெற்றிடங்களில் 67% வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டு பெரும்பாலான பல்கலைக்கழகங்களினால் அவற்றிற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது பத்திரிகை விளம்பரங்கள் மூலம் அனைவரும் அறியமுடியும்.
கோரிக்கைக் கடிதங்கள்
ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் 355 பதவி வெற்றிடங்களில் 67 வீதமான 237 இற்கு மதிகமான வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியில் ஆக 07 வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்படுவது தனியே பல்கலைக்கழக சமூகம் மாத்திரமன்றி எமது சமூகத்தின் இளம் தொழில் தேடுவோரே. எனவே இந்நிலைமைக்கு யார் பொறுப்பு கூறுவது? எனும் கேள்வி எம்மத்தியில் எழுந்துள்ளது.
இவ் வெற்றிடம் நிரப்பும் பொறிமுறை உருவாக்கத்தில் எமது உழைப்பு மிகவும் பெரியது 2023 ஆம் ஆண்டு வெற்றிடங்களை நிரப்பும் வேண்டுகோளை அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் ஊடாக முன்னுரிமைப்படுத்தியது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமே அதனைத் தொடர்ந்து இவ் அரசுக்கும் அழுத்தங்களை கொடுத்து வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை வழங்குவதில் திறைசேரி (DMS) காட்டிய தாமதங்களை சுட்டிக்காட்டி அனுமதியை உயர்கல்வி அமைச்சு அதிகாரிகள் கொண்ட குழுவாக மாற்றி அமைந்ததிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் பெரும்பங்கு உள்ளது, இது இவ்வாறு இருக்க எமது வெற்றிடங்கள் இன்று நிரப்பப்படாத நிலைமை எமக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கோரிக்கைக் கடிதங்களில் காணப்படும் தவறுகளை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடல்களில் (20.03.2025, 30.09.2025) தெளிவுபடுத்தி இருந்த போதிலும் அதில் UGC அக்கறை செலுத்தாது பல்கலைக்கழகத்தின் தவறை அவர்களே சீர் செய்ய வேண்டும் எனக் கூறி இன்று அதற்கான அனுமதி கிடைக்கப்பெறாததற்கு அவர்களும் பொறுப்பானவர்கள் ஆவார்கள்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 355 வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தனது கோரிக்கை கடிதத்தில் வெறும் 117 வெற்றிடங்கள் நிரப்புவதற்கு அனுமதி கேட்டுள்ளது. இது தவறென நாங்கள் பல தடவை சுட்டிக் காட்டியும் இன்றுவரை மாற்றப்படவில்லை.
கோரிக்கை கடிதத்தில் தவறு
இதற்கான காரணம் வேலையாட்கள் தரம் மற்றும் பொறியியல் சேவைகளில் காணப்படும் தரங்களுக்கான வெற்றிடங்கள் முறையற்ற விதத்தில் தனியார் நிறுவனங்களின் நிரப்பப்படுகின்றன. இது தற்காலிகமானது என பதிவாளர் கூறியிருந்த போதிலும் எதற்காக அனுமதிக்கடிதத்தில் அவ்வெற்றிடங்கள் வெளிப்படுத்தப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது? என்பது மெக்கு இன்னும் பலவித ஐயத்தை ஏற்படுத்தியிருந்தது.
கோரிக்கை கடிதத்தில் தவறு மட்டுமல்லாது கடிதம் அனுப்புவதிலும் பல நிர்வாக தவறுகளை எமது பல்கலைக்கழகம் வேண்டுமென்றே ஏற்படுத்தியதாகவே நாம் கருத வேண்டியுள்ளது.
ஏனெனில் கல்வி சார் ஊழியர்களுக்கான அனுமதி கடிதம் சரியான முறையில் சென்று சேர்ந்துள்ளது. இங்கு குறிப்பிடத்தக்கது அதற்கான ஒரு தொகுதி அனுமதியும் கிடைக்க பெற்றுள்ளது
எனவே பதிவாளர் துணைவேந்தர் ஆகியோரின் அசமந்த செயற்பாடு இன்று எம்மை தொழிற்சங்கப் போராட்டத்தை ஏற்படுத்த தூண்டி உள்ளது.
அது மட்டுமல்லாது நாம் இது தொடர்பாக 4 கடிதங்களை எமது பேரவைத் தலைவருக்கு சமர்ப்பித்திருந்த போதிலும் இன்றுவரை அது பேரவையினால் கலந்துரையாடப்படவில்லை. இறுதியாக நாம் வழங்கிய கடிதத்திற்கு பதிவாளரினாலேயே பதில் வழங்கப்பட்டுள்ளது.
அதுவும் ஒரு மேம்போக்கான பதிலாகவே காணப்படுகின்றது இவ்வளவு நிர்வாகத்தவறுகள் திரும்பத் திரும்ப ஏற்பட்டிருந்த போதிலும் தாம் சிறு தவறை இழைத்ததாகவும் இது உயர் கல்வி அமைச்சின் திட்டமிட்ட தாமதப்படுத்துதல் செயல்பாடு என அவர்கள் மீது குற்றத்தை சுமத்தி பத்திரிகை செய்தி வெளியிட்டு அரசியல் சாயம் பூசும் செயற்பாடாகவே நாம் இதை கருதுகிறோம்.
எமது நியாயமான கோரிக்கைகளையும் கலந்துரையாடல்கள் மூலமும் இன்னும் இயலுமான வழிகளில் முன்வைத்து வந்துள்ளோம் அவற்றில் மிகவும் முக்கியமான கோரிக்கையாக ஆளணி நிரப்புதலே இடம் பெற்றிருந்தது என்பதுடன் இவ்விடயம் தொடர்பில் பின்வரும் விடயங்கள் எம்மால் கட்டிக்காட்டப்பட்டிருத்தது.
1. நிரந்தர ஆள ஆளணி நிரப்புவதில் ஆர்வம் காட்டாது தற்காலிக ஆளணியினரை பொருத்தமற்ற வழிகளில் நிரப்புவதில் முனைப்புக் காட்டுவதை பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தோம்.
2. நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்ட போதனை சாரா ஊழியர்களின் ஆளணி நிரப்புதல் தொடர்பான கோரிக்கைகளில் 355 வெற்றிடங்களும் இருந்தபோதும் 117 வெற்றிடங்களே கோரப்பட்டுள்ளது. குறிப்பாக அலுவலக உதவியாளர்களுக்கான (Work aids) 107 வெற்றிடங்கள் உட்பட 238 இற்கும் அதிகமான வெற்றிடங்கள் தனியார் நிறுவனங்களுடாகவும், சுற்றுநிரூபங்களிற்கு முரணாகவும் உள்வாங்கப்பட்டு ஓர் சேவை ஒப்பந்தத்தினுடாக செய்வது தவறு என்றும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
3. அவ்வாறே முன்வைக்கப்பட்ட போதனை சாரா ஊழியர்களின் ஆளணி நிரப்புதல் தொடர்பான கோரிக்கைகளில் போதுமான நியாயப்பாடுகள் வழங்கப்பட்டிருக்கவில்லை என 20.03.2025 UGC கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியிருந்தோம்.
4. ஏனைய பல்கலைக்கழகங்கள் இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பிடம் நேரிற்சென்று தமது கோரிக்கைகளை முன்வைத்து அடிக்கடி அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர் எனவே எமது நலனில் அக்கறை கொண்டவர்களாக எமது நிர்வாகமும் நேரிற் சென்று தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கும் படியும் கோரியிருந்தோம்.
5. மேலும் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் நாமும் உரிய தரப்புக்களுக்கு அழுத்தம் வழங்கும் பொருட்டு மேற்படி விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர்பாடல் பிரதிகளை வழங்கி உதவும்படியும் கோரியிருந்தோம். ஊடான
6. அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சுடனான கலந்துரையாடல்களிலும் ஊழியர் நிரந்தர நியமனம் தொடர்பான விடயத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினராகிய நாமே கலந்துரையாடல்களுக்குள் உள்ளடக்கி எம்மால் ஆன அழுத்தங்களை பிரயோகித்திருந்தோம். ஆயினும் மேற்படி விடயம் தொடர்பில் நாம் கொண்டிருந்த கரிசனையில் எள்ளளவு கரிசனை கூட பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கொள்ளப்படவில்லை என்பது எமக்கு மிக வேதனையை தருகின்றது.
மேலும் நியமனம் தவிர ஊழியர், மாணவரின் அடிப்படை நலன் சார்ந்த பல விடயங்களை நாம் பல தடவை எமது கோரிக்கைகளாக முன் வைத்த போதும் அவை தொடர்பிலும் இதுவரை ஆக்க பூர்வமான தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதனையும் இங்கு வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.
பொதுவெளியில் நாம் அமைதி காத்த போதும் பத்திரிகைச் செய்திகள் ஊடாக, எமது பொறுமையின் எல்லையைக் கடக்க வேண்டிய சூழ்நிலையினை ஏற்படுத்தி விட்டதோடு மேலும், இலகுவாகச் செயற்படுத்த கூடிய ஊழியர் மற்றும் மாணவர் நலன் சார்ந்து எம்மால் முன்வைக்கப்பட்ட சிறு விடயங்களைக் கூட இது வரை ஆக்க பூர்வமாக தீர்க்கத் தவறியதன் மூலம். நிர்வாகத்தின் உறுதி மொழிகளையோ, வாய் வார்த்தைகளையோ மீண்டும் மீண்டும் நம்ப முடியாத நிலைக்கு எம்மை தள்ளியுள்ளார்கள்.
எது எவ்வாறு இருந்தபோதிலும் இன்று முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டது எமது சமூகமே இனி இதற்கான அனுமதிகள் எத்தனை ஆண்டுகள் தாமதிக்குமோ எமக்குத் தெரியாது ஆனால் உயர் கல்வி அமைச்சு தெரிவு குழுவின் பரிந்துரைப்படி மற்றைய பல்கலைக்கழகங்களின் கோரிக்கைகளில் 67 வீதம் கிடைக்கப் பெற்ற அதே தொகையை ஏறத்தாழ 230 வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி கிடைக்கப்பெறும் வரை எமது போராட்டம் தொடரும்.
அது மட்டும் அல்லாது எமது பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடி ஏற்றுக்கொள்ளப்பட்ட 26 விடயங்களும் இன்று ஒரு வருடத்திற்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன இதற்கான தீர்வுகளும் இதுவரை கிட்டப்படவில்லை இது திட்டமிட்டு கல்வி சாரா ஊழியர்களின் செயல் திறனை முடக்கி பல்கலைக்கழகத்தினை நலிவுப்படுத்தும் செயற்பாடாகவே நாம் கருதுகிறோம்.
எனவே, எமது ஊழியர் சங்க விசேட பொதுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி உரிய தரப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக எதிர்வரும் 28.10.2025 அன்று அடையாள வேலை நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்வதுடன், எமது நியாயமான கோரிக்கைகள் அனைத்திற்கும் நியாயமான தீர்வு கிடைக்காதபட்சத்தில் எமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தி அனைத்துப் பலகலைக்கழகங்களுக்கும் விஸ்தரிப்பது எனவும் தீர்மானித்துள்ளதை மிகவும் மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்திருந்த்ஜமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 3 மணி நேரம் முன்
