சீனாவின் கடன் வலையில் சிக்கிய நாடுகள்! முதலிடத்தில் இருப்பது எந்த நாடு தெரியுமா...
பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் நாடுகளுக்கும் வறுமையில் இருக்கும் நாடுகளுக்கும் தானாக முன்வந்து உதவி செய்து அவர்களை தன்னுடைய கடன்காரர்களாக மாற்றும் வழிமுறையை சீனா (China) காலம் காலமாக பின்பற்றி வருகிறது.
வெளிநாடுகளுக்கு சீனா வழங்கியுள்ள கடன்களில் 44 % ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், 2012 ஆம் ஆண்டில் தெற்காசிய நாடுகளுக்கு சீனா வழங்கிய கடனின் மதிப்பு 6.4 மில்லியன் டொலர்களாக இருந்து 2022 ஆம் ஆண்டில் 42.9 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது, இதில் மூன்றில் இரண்டு பகுதி கடன் தொகை பாகிஸ்தானிற்கு (Pakistan) கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சீனா மூன்று குறிக்கோள்களின் அடிப்படையில் தான் கடன்களை வழங்குகிறது, எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், கனிம வளங்கள் அதிகம் நிறைந்திருக்கும் நாடுகள், ஆபிரிக்க நாடுகள் (Africa), அதேபோல சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் வரக்கூடிய நாடுகள் ஆகியவற்றுக்கு தான் அதிக அளவில் கடனை வழங்கியுள்ளது.
அமெரிக்காவுக்கு ரஷ்யா கொடுத்த பதிலடி...நேட்டோவுக்கு எதிராக உருவாகும் புதிய கூட்டணியால் வலுக்கும் சிக்கல்!
இலங்கை
அதன்படி, பாகிஸ்தான் சீனாவிற்கு கிட்டத்தட்ட 2.1 லட்சம் கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்த வேண்டியிருக்கிறது. சாலை மற்றும் எரிசக்தி திட்டங்கள், துறைமுகத் திட்டங்களுக்கு சீனா பெருமளவு கடன் வழங்கியுள்ளது.
அங்கோலா (Angola) நாடு சீனாவிற்கு 2.1 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையை திரும்ப வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எண்ணெய் மற்றும் வைரம் வளங்கள் நிறைந்த இந்த நாடு உட்கட்டமைப்பு பணிகளான சாலை, தொடருந்து மற்றும் வீட்டு மேம்பாட்டு திட்டங்களுக்கு சீனாவிடம் பெரிய அளவிலான தொகையை கடனாக வாங்கியுள்ளது.
இலங்கை (Sri Lanka) சீனாவிடம் கிட்டத்தட்ட 74,000 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி இருக்கிறது. இலங்கையும் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் கட்டுமான பணிகளுக்காக சீனாவிடம் இந்த கடனை வாங்கியுள்ளது.
அடுத்தது எதியோப்பியா (Ethiopia) சீனாவிடம் 56,000 கோடி கடனை வாங்கி இருக்கிறது. குறிப்பாக தகவல் தொடர்பு துறை மற்றும் தொழில் மேம்பாட்டுக்காக இந்த கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொருளாதார மேம்பாடு
உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் கென்யா (Kenya) சீனாவிடம் 55,000 கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளது. இந்த நாடும் உற்பத்தி, எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்தக் கடனை பெற்றிருக்கிறது.
அடுத்து பங்களாதேஷ் (Bangladesh) மற்றும் ஸாம்பியா (Zambia) ஆகிய இரண்டு நாடுகளுமே சீனாவிடம் 50,000 கோடி ரூபாயை கடனாகப் பெற்றுள்ளன. சாலைக் கட்டமைப்புகள், பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் பொருட்டு இந்த கடன்களை பெற்றுள்ளன.
லாவோஸ் (Laos) நாடு 44,000 கோடி ரூபாய் கடனை பெற்றுள்ளது. குறிப்பாக நீரியல் சக்தித் திட்டங்களுக்காக இந்த கடன்களை பெற்றிருக்கிறது. அதேபோல எகிப்து (Egypt) சீனாவிடம் 43,000 கோடி கடனை பெற்றுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த கடன்கள் பெறப்பட்டுள்ளன.
நைஜீரியாவிற்கு (Nigeria) சீனா 35,000 கோடி கடன்களை வழங்கியுள்ளது. தொடருந்து சாலைப் போக்குவரத்து மற்றும் விமான நிலையங்கள் போன்ற உட்கட்டமைப்பு பணிகளுக்காக இந்தக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் கடைசி இடத்தை ஈக்வடார் (Ecuador) நாடு பிடித்துள்ளது இந்த நாடு சீனாவிடம் 34,000 கோடி ரூபாய் கடனை பெற்றுள்ளது.இந்த நாட்டிலும் போக்குவரத்து மற்றும் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்வதற்காக சீனா கடனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |