தாய் மற்றும் மகன் மீது கொடூர தாக்குதல்: பின்னணியில் வெளிவந்த காரணம்
எல்பிட்டிய காவல்துறை பிரிவுட்குட்பட்ட பிரதேசமொன்றில் வீதியில் பயணித்த தாய் மற்றும் அவரது மகன் மீதும் நபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவமானது, இன்று(11) காலை இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், அயலவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பான முறைப்பாடு தொடர்பில் எல்பிட்டிய காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்ட போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எல்பிட்டிய, அனுருத்தகம பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதான தாயும் அவரது 25 வயதுடைய மகனுமே இவ்வாறு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகைளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |