யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு
Sri Lanka Police
Jaffna
Jaffna Teaching Hospital
Death
By Thulsi
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளம் தாய் நேற்றைய தினம் ( 09) வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெடுந்தீவைச் சேர்ந்த 25 வயது கில்மன் நோபட் தர்சிகாமேரி என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறப்புக்கான காரணம்
இறப்புக்கான காரணம் உயர் குருதியமுக்கம் மற்றும் வலிப்பு காரணமாக உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இளந்தாய் பிரசவித்த பெண் குழந்தை வைத்தியசாலையில் ஆரோக்கியமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் மருத்துவ பரிசோதனையின் பின் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்