கிணற்றில் தவறி விழுந்த இளம் குடும்பப் பெண் பலி!
Sri Lanka Police
Kurunegala
Sri Lanka
By Shalini Balachandran
குருநாகலில் கிணற்றில் தவறி விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கல்கமுவை பிரதேசத்தில் நேற்று (08-11-2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் குறித்த பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வீட்டுத் தேவைகளுக்காக நீரினைப் பெற்றுக்கொள்ளக் கிணற்றுக்குச் சென்ற போதே எதிர்பாராத விதமாக இவர் நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

அவர் உடனடியாகக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கல்கமுவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி