மூன்று பிள்ளைகளுடன் சேர்ந்து தானும் விபரீத முடிவெடுத்த தாய் - மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்
police
mother
investigation
children
poison
By Sumithiran
தான் பெற்ற மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்த தாய் மற்றும் பிள்ளைகள் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை - ஹாலிஎல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
6,4 மற்றும் 3 வயதுடைய பிள்ளைகளுக்கே தாயார் விஷத்தை அருந்தக் கொடுத்துள்ளார். விஷம் அருந்திய பிள்ளைகளும் தாயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இந்த குடும்பம் வாழ்ந்து வந்ததாகவும் இதனால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.