நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் படுதோல்வி!
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தோற்கடிக்கப்பட்டு, அரசாங்கம் அமைச்சருக்கான தனது பலத்தை நிரூபித்துள்ளது.
இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், அதற்கு எதிராக 152 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 36 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதன்போது எவரும் வாக்களிக்காமல் இருக்கவிலை என தெரியவருகிறது.
பதவியிலிருந்து நீக்கும் முயற்சி
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து, நாட்டின் சிறைச்சாலை அமைப்பின் நிர்வாகம் மற்றும் மேற்பார்வையில் குறைபாடுகள் நிலவுவதாகவும், அந்த மோதலைத் தடுக்க நீதி அமைச்சர் தவறிவிட்டார் என்றும் குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகளால் சபாநாயகரிடம் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளிக்கப்பட்டிருந்தது.

எனினும், எதிர்க்கட்சியின் இந்த முயற்சியை பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்ததன் மூலம், ஹர்ஷன நாணயக்காரவை பதவியிலிருந்து நீக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ள சம்பந்தமுடைய ஒரு இராணுவத் தளபதி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |