வாகன விபத்தில் சிக்கி அருட்தந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு!
Sri Lanka Police
Mannar
Sri Lanka Police Investigation
By Laksi
மன்னார் - அடம்பன் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (4)மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை டிலான் என்பவரே இ்வ்வாறு உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது மன்னார் - அடம்பன் பகுதியூடாக அருட்தந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதுண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மன்னார் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 19 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்