திருமலையில் விபத்து : பேருந்தின் பின்னால் மோதிய மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயம்!
திருகோணமலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை - அனுராதபுர வீதியின் ரொட்டவெவ பகுதியில் இன்று (16) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், திருகோணமலையிலிருந்து ஹொறவப்பொத்தான நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்துக்கு பின்னால் அதே திசையில் மோட்டார் சைக்கிளும் பயணித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயம்
இதன்போது, முன்னால் சென்ற பேருந்து திடீரென நிறுத்தப்பட்டமையினால், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பேருந்தின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிள் பேருந்தின் பின்புறப் பகுதிக்குள் சொருகிய நிலையில் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி உடனடியாக மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ரொட்டவெவ மற்றும் திருகோணமலை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |