மாத்தறை துப்பாக்கிசூடு: சிக்கிய முக்கிய ஆதாரம்
STF
Matara
Gun Shooting
By Sumithiran
மாத்தறை(matara) பிரதேசத்தில் இன்று(03) காலையில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6.30 மணியளவில் மாத்தறை, கந்தறை அருகே கபுகம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது. அதில் இலக்கான வர்த்தகர் ஒருவர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்
இந்நிலையில் குறித்த துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் இன்று மாலை 3.00 மணியளவில் யடியன பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினர் குறித்த ஸ்கூட்டியை கைப்பற்றி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்