யாழில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பல்: மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Shadhu Shanker
யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவமானது இன்று(15) அதிகாலை 1:30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பெற்றோல் குண்டு வீசி தீயிட்டு எரித்து வீட்டில் ஜன்னல்கள் கதவுகள் என்பவற்றையும் கூரிய ஆயுதங்களால் உடைத்து சேதமாக்கியுள்ளனர்.
தீயிட்டு எரிக்கப்பட்ட சைக்கிள்கள்
வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளை கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர் தமது வீட்டை உடைத்து மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு எரித்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி