அமெரிக்காவிற்கு பேரிழப்பு : அதிநவீன ட்ரோனை இழந்தது
அமெரிக்க விமானப் படையின் அதிநவீன ட்ரோன் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்துக்குள்ளான ஆளில்லா விமானம் அமெரிக்க விமானப் படையின் 'MQ-9A ரீப்பர்' ட்ரோன் என்பது தெரியவந்துள்ளது.
கிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டியில் உள்ள சாபெல்லி விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த ட்ரோன் கீழே விழுந்து நொருங்கியதாக நம்பப்படுகிறது.
விபத்துக்கான காரணம் வெளிவரவில்லை
ரீப்பர் ட்ரோன் எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தானாகவே விபத்துக்குள்ளானதா என்ற தகவல் வெளியாகவில்லை.
Un drone américain s'écrase près du cimetière de Chebelley#adi pic.twitter.com/SJJjVFxiyK
— Agence Djiboutienne d'Information (ADI) (@AgenceAdi) August 9, 2026
ஜிபூட்டி நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள சாபெல்லி விமான ஏர் பேஸ், ஆபிரிக்க கண்டத்தில் அமெரிக்க இராணுவத்தின் மிக முக்கியமான மையமாகச் செயல்பட்டு வருகிறது.
கண்காணிப்பு நடவடிக்கை
தெற்கு செங்கடல் பகுதி உட்படப் பிராந்தியம் முழுவதும் உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா இந்த 'MQ-9 ரீப்பர்' ட்ரோன்களை சாபெல்லி தளத்தில் இருந்தே இயக்கி வருகிறது.

அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த ரூ.415 கோடி மதிப்பு கொண்டது இந்த 'MQ-9 ரீப்பர்' ட்ரோன் ஆகும்
230 புலம்பெயர்ந்தவர்களுடன் ஆங்கில கால்வாயை கடந்து இங்கிலாந்து சென்ற சிறிய படகு : முறியடிக்கப்பட்ட சாதனை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |