அடுத்த வெற்றிக்கு தயாராகும் சிஎஸ்கே
மகேந்திர சிங் தோனி இன்னும் 10 நாட்களில் வலைப்பயிற்சியில் ஈடுபடுவார் என சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
2024 ஐபிஎல் ற்கான மினி எல்லாம் டுபாயில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்றது.
10 அணிகளும் தங்கள் அணிக்கான வீரரர்களி ஏலத்தில் எடுத்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனைவரும் எதிர்பார்த்த நியூஸிலாந்து வீர் ரச்சின் ரவீந்திரா (ரூ. 1.80 கோடி) ஷர்துல் தாக்கூர் (ரூ. 4 கோடி), டேரல் மிட்செல் (ரூ. 14 கோடி), சமீர் ரிஸ்வி (ரூ. 8.40 கோடி), முஸ்தபிசுர் ரஹ்மான் (ரூ. 2 கோடி), ஆரவெல்லி அவனிஷ் (ரூ. 20 லட்சம்) ஆகியோரையும் ஏலத்தில் வாங்கியது.
இந்நிலையில் 2024 மார்ச் தொடக்கம் மே மாதங்களில் ஐபிஎல் 17 வது பதிப்பு நடைபெறவுள்ள நிலையில் தோனி தற்போது தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காக வலைப்பயிற்சியில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐபிஎல் தொடருக்காக தோனி தற்போது தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மகேந்திர சிங் தோனி
அதேவேளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் தங்களை தயார் படுத்தி கொள்வதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மகேந்திர சிங் தோனியின் இறுதி ஐபிஎல் தொடர் என ரசிகர்களால் கூறப்பட்டு வரும் நிலையில் அடுத்த வருட ஐபிஎல் தொடரருக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |