சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக மீண்டும் ஜோர்ஜீவா
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக பணியாற்ற பொருளியலாளரான திருமதி கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு நேற்று (12) அவர் தெரிவு செய்யப்பட்டார்.
பல சுற்று பேச்சுவார்த்தைகள்
சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே வேட்பாளர் இவர் என்றும், இந்த நியமனத்தை வழங்குவதற்கு முன்னர் அவருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது
அவரது வலுவான மற்றும் சுறுசுறுப்பான தலைமை சர்வதேச நாணய நிதிய நிர்வாகத்தால் பாராட்டப்பட்டது.
ஒக்டோபர் 1, 2019 முதல்
பல்கேரிய நாட்டைச் சேர்ந்த திருமதி ஜோர்ஜீவா, ஒக்டோபர் 1, 2019 முதல் சர்வதேச நாணய நிதிய நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார்.
அதற்கு முன், அவர் ஜனவரி 2017 முதல் உலக வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |