குடும்பத்தகராறு கத்திக்குத்தில் முடிவடைந்தது -ஒருவர் படுகாயம்
arrest
police
attack
investigation
mullaithivu
By Sumithiran
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீராவிப்பிட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தகராறு காரணமாகவே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் நீராவிப்பிட்டி பகுதியை சேர்ந்த 39 வயதுடைய முகமட் றஜாஜ் என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்