முள்ளியவளையில் சைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து உயிரிழப்பு!
police
death
investigation
mullaitivu
mulliyavalai
By Kalaimathy
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை பகுதியில் சைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு வேளையே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த 74 வயதுடைய நடராசா சிவராசா என்பவரே சைக்கிளில் பயணிக்கும் போது திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் PCR பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி