முல்லைத்தீவில் போராட்டம் - பெரும்பான்மையினரின் அத்துமீறலுக்கு காவல்துறையினர் உடந்தையா..!

Sri Lanka Police Mullaitivu SL Protest
By Beulah Aug 07, 2023 11:31 AM GMT
Report

குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை கைது செய்தமையை கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும் இன்றையதினம்(07) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தண்ணிமுறிப்புகுளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை விடுவிக்க கோரி குறித்த போராட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று, காலை 10.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

பின்னணி

முல்லைத்தீவில் போராட்டம் - பெரும்பான்மையினரின் அத்துமீறலுக்கு காவல்துறையினர் உடந்தையா..! | Mullativu Protest Against Police

தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட குமுழமுனை தண்ணிமுறிப்பு மக்களுக்கும், ஹிச்சிராபுரம் மக்களுக்குமே அனுமதி உள்ள நிலையில் கஜபாகுபுர , சம்பத்நுவர, ஜனகபுர, கலியாணபுர பகுதியிலிருந்து வந்த பெரும்பான்மையினர் அத்துமீறி கடந்த சனிக்கிழமையன்று(05)  மீன்பிடியில் ஈடுபட்டதை தொடர்ந்து மீனவ சங்கத்தினருக்கும், பெரும்பான்மையின மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 38 சிங்கள மொழிபேசும் மீனவர்களையும் , அவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் குறித்த பகுதி மக்கள் ஒட்டுசுட்டான் கால்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களில் ஒன்பது பேர் பொதுமக்களால் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட ஹிச்சிராபும், குமுழமுனை தண்ணிமுறிப்பு சங்கத்தினை சேர்ந்த 17 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

நிரந்தர தீர்வு

முல்லைத்தீவில் போராட்டம் - பெரும்பான்மையினரின் அத்துமீறலுக்கு காவல்துறையினர் உடந்தையா..! | Mullativu Protest Against Police

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பொதுமக்கள், மீனவர் சங்க உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போராட்டத்தில் காவல்துறையினரிடம் ஒப்படைத்தவர்கள் தப்பி சென்றது எப்படி?, உயிர் போனாலும் உரிமையை விட்டு கொடோம், தமிழ் தேசத்தில் தமிழருக்கு உரிமை இல்லையா?, எமது வாழ்வாதாரத்தில் கை வைக்காதே, சட்ட பூர்வ தொழிலாளர்களை கைது செய்தது எவ்வாறு, நிறுத்து நிறுத்து பெரும்பான்மையினரின் அத்து மீறலை நிறுத்து, சட்டத்தை மீறி தொழில் செய்வோரை தண்டிக்க யாரும் இல்லையா? அரச அதிகாரிகளே, தமிழ் பேசும் மீனவர்களின் உடமைகளை நாசமாக்காதே, சட்ட விரோத தொழிலாளருக்கு காவல்துறையினர் உடந்தையா? போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பாதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தின் பின்னர் தமிழ் பேசும் மீனவ சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் அடங்கிய மகஜர் வாசித்து காட்டியதன் பின்னர் அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம் மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது.

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அரசாங்க அதிபர் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தி பிரச்சினையை கதைத்ததன் பின்னர் நிரந்தர தீர்வினை பெற்றுத்தர முயற்சி செய்வதாகவும், கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025