முல்லேரியா சூட்டுச் சம்பவம்! வெளியான அதிர்ச்சித் தகவல்
Police
Shooting
SriLanka
Mulleriyawa
By Chanakyan
முல்லேரியா பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தை நடத்தியவர்கள் காவல்துறையினர் போன்று வேடமிட்டு சென்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் தன்திரிகே நுவன் (வயது-42) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணிக்கும் விதம் அருகில் இருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.
இது தொடர்பில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் கருத்து தெரிவிக்கையில் போதைப்பொருள் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.


